Banner adz

Tuesday, 29 May 2018

KK NANBAN

Tamil Christian Song Lyrics - அன்பினில் பிறந்த இறைகுலம் நாமே

Tamil Christian Song Lyrics - அன்பினில் பிறந்த இறைகுலம் நாமே

Christian Song, Prayer Song, Tamil Song, Song Lyrics, Tamil Christian Songs, பாடல்கள், Christian Song Lyrics Download, வருகைப் பாடல்கள்.

0010. அன்பினில் பிறந்த இறைகுலம் நாமே
அன்பினைக் காத்து அறம் வளர்ப்போமே - 2
1. ஒரு மனத்தோராய் அனைவரும் வாழ்வோம்
அருள்ஒளி வீசும் ஒரு வழி போவோம் (2)
பிரிவினை மாய்த்து திருமறை காப்போம் - 2
பரிவுள்ள இறைவன் திருவுளம் காண்போம்
2. பிறப்பிலும் இயேசு இறப்பிலும் இயேசு
பெருமை செய்தாரே புனிதப் பேரன்பை (2)
பிறந்த நம் வாழ்வின் பயன்பெற வேண்டும் - 2
பிறரையும் நமைப் போல் நினைத்திட வேண்டும்
Read More
KK NANBAN

Tamil Christian Song Lyrics - அன்பின் விழுதுகள் படர்ந்திடவே

Tamil Christian Song Lyrics - அன்பின் விழுதுகள் படர்ந்திடவே

Christian Song, Prayer Song, Tamil Song, Song Lyrics, Tamil Christian Songs, பாடல்கள், Christian Song Lyrics Download, வருகைப் பாடல்கள்.

0009. அன்பின் விழுதுகள் படர்ந்திடவே
மனித மாண்புகள் உயிர்த்திட
மனச் சிறையின் கதவுகள் உடைந்திடவே
இறை உணர்வுகள் வாழட்டும் - 2 (2)
1. வழிபாட்டில் காணும் உணர்வுகள் நம்
வாழ்வில் நதியாய்ப் பாயட்டும் (2)
வேதத்தில் வாழும் பண்புகள் நம்
மனதில் வாழ்வாய் அமையட்டும் (2)
புதிய பாதையில் தொடர்ந்து புதுயுகம் நாம் படைப்போம் -2
இனி வரும் நாளில் புது வாழ்வில் இறைஇன்பம் காண்போம்
2. வார்த்தைகள் பேசும் உண்மைகள் நம்
இதயத்தில் உயிராய் வாழட்டும் (2)
உரிமையில் பூத்த உறவுகள் புதுக்
கவிதைகள் பாடி மகிழட்டும் - புதிய பாதையில் ... ...
Read More
KK NANBAN

Tamil Christian Song Lyrics - அன்பின் திருக்குலமே இறை இயேசுவின் அரியணையே

Tamil Christian Song Lyrics - அன்பின் திருக்குலமே இறை இயேசுவின் அரியணையே

Christian Song, Prayer Song, Tamil Song, Song Lyrics, Tamil Christian Songs, பாடல்கள், Christian Song Lyrics Download, வருகைப் பாடல்கள்.

0008. அன்பின் திருக்குலமே இறை இயேசுவின் அரியணையே
எழுவோம் ஒரு மனதாய் கூடித் தொழுவோம் புகழ்ப் பலியாய் (2)
இறைகுலமே எழுவோம் இறையரசை அமைப்போம்
மறையுடலாய் வருவோம் திருப்பலியில் இணைவோம் (2)
1. இருளின் ஆட்சியை முறியடிக்க
அன்று நிகழ்ந்த பலியை நினைப்போம்
இறைவன் மைந்தனே பலிப்பொருளாய்
தன்னை இழந்த தியாகம் உரைப்போம் (2)
சுயநலம் மறைய சமத்துவம் மலர
அன்பு பரிவு கொண்ட இறைகுலம் வளர்ப்போம்
2. இறைவன் வார்த்தையை எடுத்துரைக்கும் - இந்த
இனிய பலியில் இணைவோம்
உறவு விருந்தினை பரிமாறும்
திருவிருந்து பகிர்வில் மகிழ்வோம் (2)
வலிமையில் வளர வாஞ்சையில் திகழ
வள்ளல் இயேசுவின் அழைப்பினை ஏற்போம்
Read More
KK NANBAN

Tamil Christian Song Lyrics - அற்புத அன்பனின் அடிதொழவே

Tamil Christian Song Lyrics - அற்புத அன்பனின் அடிதொழவே

Christian Song, Prayer Song, Tamil Song, Song Lyrics, Tamil Christian Songs, பாடல்கள், Christian Song Lyrics Download, வருகைப் பாடல்கள்.

0007. அற்புத அன்பனின் அடிதொழவே
அவரின் பாதம் அணி திரள்வோம்
இத்தனை இகம் வாழ் உயிர்களுமே
இயேசுவை வணங்கிடுமே (2)
1. ஆலயமணியின் ஓசையைக் கேட்போம்
ஆயனே நம்மைக் கூப்பிடக் கேட்போம் (2)
ஆவியின் அருளால் அறவழி நடப்போம்
அவரின் வார்த்தையை வாழ்வினில் ஏற்போம் (2)
அன்பினில் இணைவோம் அருளில் நிலைப்போம்
ஆனந்தமாய் வாழ்வோம் (நாம்) - (2)
2. ஆலயக் கதவு திறந்திடப் பார்த்தோம்
ஆண்டவன் சந்நிதி வணங்கியே நின்றோம் (2)
அன்புக் கரங்கள் கூப்பியே தொழுவோம்
அவரின் அருளால் ஆறுதல் அடைவோம் (2) அன்பினில் ... ...
Read More
KK NANBAN

Tamil Christian Song Lyrics - அழைக்கும் இறைவன் குரலைக்கேட்டு எழுந்து வாருங்கள்

Tamil Christian Song Lyrics - அழைக்கும் இறைவன் குரலைக்கேட்டு எழுந்து வாருங்கள்

Christian Song, Prayer Song, Tamil Song, Song Lyrics, Tamil Christian Songs, பாடல்கள், Christian Song Lyrics Download, வருகைப் பாடல்கள்.


0006. அழைக்கும் இறைவன் குரலைக்கேட்டு எழுந்து வாருங்கள்
அனைத்தும் அவரின் சங்கமமாக விரைந்து வாருங்கள் (2)
பலி செலுத்திடவே பலன் அடைந்திடவே - 2
படைத்த தேவன் புகழ் பரப்பப் பணிந்து வாருங்கள்
1. பாதை காட்டும் ஆயனாக இறைவன் அழைக்கின்றார்
பாவம் நீக்கி பாசம் காட்ட தேவன் அழைக்கின்றார் (2)
அன்பின் ஆட்சியே அவரின் மாட்சியே - 2
படைத்த தேவன் புகழ் பரப்பப் பணிந்து வாருங்கள்
2. வாழ்வு வழங்கும் வார்த்தையாக வாழ அழைக்கின்றார்
வாரி வழங்கும் வள்ளலாக பரமன் அழைக்கின்றார் (2)
நிறைந்த வாழ்விலே நம்மை நிரப்பவே - 2
இனிய தேவன் நம்மை அழைக்க இணைந்து வாருங்கள்
Read More