திருச்சிலுவைப் பாதை தொடக்க செபம் (way of the cross prayer in tamil)

திருச்சிலுவைப் பாதை தொடக்க செபம்


Hai this is my official website www.jesusbin.blogspot.com. In this website Jesus Photos, Christian Photos, Prayers, song lyrics, Bible News and details about jesus are publish for you. Use that Properly and forward your friends.

In this section we provide திருச்சிலுவைப் பாதை தொடக்க செபம் 


Tags:

way of the cross prayer in tamil, way of the cross Starting prayer in tamil, way of the cross prayers, Siluvai Pathai Prayer, Thavakkala Prayers, Tamil Christian Prayers, Tamil Prayers, Christian PrayersNew Christian Prayers, Old Christian Prayers.


முதல்வர்: பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே, ஆமென்!
எல்லோரும்: இரக்கத்தின் ஊற்றே இறைவா, உம் திருமகன் இயேசுவின் பாடுகளையும் இறப்பையும் நாங்கள் நினைவுகூர்கின்றோம். அவர் நடந்துசென்ற சிலுவையின் பாதையில் அவரைப் பின்சென்று நடந்திட நாங்கள் வந்துள்ளோம். இறுதிவரை இயேசுவின் உண்மைச் சீடராக நாங்கள் வாழ வரமருள வேண்டுமென்று உம்மை இறைஞ்சி மன்றாடுகின்றோம். ஆமென்!
சுருக்கமான உத்தம மனஸ்தாப ஜெபம்;
என் இறைவா! நன்மை நிறைந்தவர் நீர். அனைத்திற்கும் மேலாக அன்பக்கு உரியவர். என் பாவங்களால் உம்மை மனநோகச் செய்துவிட்டேன். ஆகவே நான் குற்றங்கள் பல செய்தேன் எனவும் , நன்மைகள் பல செய்யத் தவறினேன் எனவும் மனம் நொந்து வருந்துகிறேன்.உமது அருள் துணையால் நான் மனம் திரும்பி, இனிமேல் பாவம் செய்வதில்லை என்றும், பாவத்துக்கு ஏதுவான சூழ்நிலைகளை விட்டு விலகுவேன் என்றும் உறுதி கொடுக்கிறேன்.எங்கள் மீட்பராம் இயேசு கிறிஸ்துவின் பாடுகளின் பயனாக, இறைவா, என்மேல் இரக்கமாயிரும்.
திவ்விய இயேசுவே! எங்களுக்காகவும் உத்தரிப்பநிலை ஆன்மாக்களுக்காகவும் சிலுைைவப் பாதையைத் தியானிப்பவர்களுக்கு அளிக்கப்படும் பலன்களை அடைய விரும்பி, உம் இரக்கத்தைக் கெஞ்சி மன்றாடுகிறோம்.
பனித மரியாவே! வியாகுல அன்னையே! இயேசுவின் பாடுகளின் போது அவரோடு நீர் உடனிருந்து, அவருடைய பாடுகளில் பங்கேற்றது போல, நாங்களும் எங்கள் அயலார் அனுபவிக்கும் துன்பங்களில் அவர்களுடன் இருந்து துணைபரியும் ஆற்றலைப் பெற உம் திருமைந்தனிடம் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
பழிகளைப் சுமத்திப் பரிகசித்தார் – உயிர்
பறித்திட எண்ணித் தீர்பளித்தார்
எனக்காக இறைவா எனக்காக இடர்பட வந்தீர் எனக்காக

Post a Comment

0 Comments