| முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம். |
| அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகத்தை மீட்டு இரட்சித்தீர். |
|
| இறந்த இயேசுவை அவரது தாயார் மடியில் அமர்த்துகிறார்கள். |
|
| செபம்: |
| அன்பு இயேசுவே! உயிரற்ற உம் சடலத்தை உம் அன்னை மரியா தம் மடியில் கிடத்தி அழுது புலம்பினார். அவரை எங்களுக்கு அன்னையாக அளித்ததற்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். எங்கள்மேல் கொண்ட எல்லையற்ற அன்பினால் நீர் எங்களுக்காக உயிர்துறந்தீர். உமது சாவு எங்களுக்கு வாழ்வு வழங்கிற்று. நாங்களும் உமது புகழ்ச்சிக்காகவும் பிறருடைய ஈடேற்றத்திற்காகவும் அயராது உழைத்திட அருள்வீராக. ஆமென்! |
|
| ஒரு பரலோக மந்திரம், அருள் நிறைந்த மந்திரம், திருத்துவ ஜெபம் சொல்வோம். |
|
| எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும் |
| மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. ஆமென். |
0 Comments