Pope Francis | ஐக்கிய அரபு எமிரேட் செல்லும் முதல் போப்பாண்டவர் வரலாறு படைக்கும் பிரான்சிஸ்!

Pope Francis | ஐக்கிய அரபு எமிரேட் செல்லும் முதல் போப்பாண்டவர் வரலாறு படைக்கும் பிரான்சிஸ்!

வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக போப் பிரான்சிஸ், ஐக்கிய அரபு அமீ ரக நாட்டுக்கு செல்கிறார் என்று வாடிகன் அறிவித்துள்ளது.
இது குறித்த செய்தி குறிப்பை வாடிகன் நகரம் வெளியிட்டுள்ளது. அதில், வரும் பிப்ரவரி 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை அபுதாபியில் நடைபெறும் கூட்டத்தில் சொற்பொழிவாற்றுவார் என்று கூறப்பட்டுள்ளது.

அபுதாபி இளவரசர் சேக் முகமது பின் சையத் அல் நகைன் அழைப்பை வாடிகன் நகரம் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மதங்களுக்கான இணக்கமான ஒன்றாக போப் பிரான்சிஸ் வருகை இருக்கும் என்றும், அரபு நாடுகளுக்கு முதல் முறையாக அவர் வருவது கலாச்சாரங்கள் இணைப்புக்கான மற்றொரு அடையாளம் என்றும் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளது.
கடந்த காலங்களில் அரபு மொழி பேசும் நாடுகளான லெபனான், எகிப்து ஆகிய நாடுகளுக்கு போப் ஏற்கனவே சென்றுள்ளார். தற்போது, ஐக்கிய அரபு அமீ ரக நாடு சுற்றுப்பயண அறிவிப்பால், முதல் முறையாக வளைகுடா நாடுகளுக்கு செல்லும் கிறிஸ்துவ மதத்தலைவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments