அதிகாலையில் பாலனை தேடி - Song Lyrics

அதிகாலையில் பாலனை தேடி

Tamil Christian Songs, Christian Song, Song Lyrics, Song Lyrics Download, X-mas Songs, X-mas Bajana Songs, X-mas Carol Songs, Christmas Songs, Christmas Carol Songs.



அதிகாலையில் பாலனை தேடி
செல்வோம் நாம் யாவரும் கூடி
அந்த மாட்டையும் குடில் நாடி
தேவ பாலனை பணிந்திட வாரீர்
வாரீர் வாரீர் வாரீர்
நாம் செல்வோம்

1. அன்னைமா மரியின் மடிமேலே
மன்னன் மகவாகவே தோன்ற
விண் தூதர்கள் பாடல்கள் பாட
விரைவாக நாம் செல்வோம் கேட்க --- அதி

2. மந்தை ஆயர்கள் யாவரும் அங்கே
அந்த மன்னவன் முன்னிலை நின்றே
தம் கந்தை குளிர்ந்திட போற்றும்
நல்ல காட்சியை கண்டிட வாரீர் --- அதி

Post a Comment

0 Comments